ஓசூர் அருகே அத்திப்பள்ளி கர்நாடக எல்லையில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து மாநில எல்லை நோக்கி சென்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது வாட்டாள் நாகராஜை போலீசார் குண்டுகட்டாக இழுத்துச் சென்றதால் கோபமடைந்த அவர் போலீசாரை கடுமையாக எச்சரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.