தமிழ்நாடு

"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம், கல்லாறு உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும், அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்கி இருக்கவும் அவர் அழைப்பு விடுத்தார். ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்கவும், அருகிலுள்ள துறைமுகங்களுக்கு அவர்களை கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக, கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்