தமிழ்நாடு

கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சென்னை :

கஜா புயல் நிவாரண நிதிக்காக சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சி மூலம் கிடைக்கும் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

பெரம்பலூர் :

பெரம்பலூரில் ரித்திகா என்ற 5 வயது சிறுமி, தான் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த ஆயிரத்து 421 ரூபாய் பணத்தை கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அளித்துள்ளார்.

திருவண்ணாமலை :

இதேபோல், கஜா புயல் நிவாரணத்திற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன், தங்கையான வேங்கடசேஷாத்திரி மற்றும் ராஜஸ்ரீநிதி ஆகிய சிறுவர்கள், தாங்கள் மடிக்கணினி வாங்குவதற்கு சேமித்து வைத்த 6 ஆயிரத்து 725 ரூபாய் பணத்தை ஆட்சியரிடம் வழங்கினர்.

நெல்லை :

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு நெல்லை மாவட்டம் மேலகரம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திரட்டிய 2 லட்சம் ரூபாய் நிதி, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்