விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சேட்டு என்பவர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுரோடு பகுதியில், 10 ஏக்கர் நிலத்தை எடுத்து, தனது குடும்பத்துடன் சேர்ந்து கரும்பு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கஜா புயலில் சிக்கி கரும்பு பயிர்கள் சேதமடைந்தன. சேதங்களை கணக்கிட வரும் அதிகாரிகள், தங்களுக்கு அந்த ஊர் விலாசத்தில் ஆதார் அட்டை இல்லை எனக்கூறி, சேத விவரங்களை பதிவு செய்ய மறுப்பதாக, சேட்டு வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.