தமிழ்நாடு

சுங்கத்துறையினர் வாகன சோதனை - சொகுசு பேருந்தில் சிக்கிய ரூ.62 லட்சம்...

ஆம்னி பேருந்தில் இருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 62 லட்சம் ரூபாயை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து ஆம்னி பேருந்தில் இருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 62 லட்சம் ரூபாயை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். எஸ்.பி. பட்டிணம் பேருந்து நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், தனியார் பேருந்தில் பல லட்சம் ரூபாய் மறைத்து எடுக்கப்பட்டு வருவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் சுங்கத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆம்னி பேருந்து ஒன்றில், 62 லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய் பணம் வைத்திருந்த அப்துல் ரவூப் என்பரை

கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அப்துல் ரவூபிடம், விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது ஹவாலா பணமாக இருக்கலாமோ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்