முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மின் கணக்கீட்டு தேதி உள்ள நுகர்வோர்களுக்கு, முந்தைய மாத மின் கட்டணம் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டண வசூல் மையங்கள் வரும் 30 ஆம் தேதி வரை செயல்படாது என்றும், அதனால் இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்துமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.