தமிழ்நாடு

ஜூலை 5 - வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.. .வகை 1 மாவட்டங்கள் - தளர்வுகள் அறிவிப்பு

ஜூலை 5 - வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.. .வகை 1 மாவட்டங்கள் - தளர்வுகள் அறிவிப்பு

தந்தி டிவி

ஜூலை 5 - வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு.. .வகை 1 மாவட்டங்கள் - தளர்வுகள் அறிவிப்பு

ஒன்று என வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளைப் பார்க்கலாம்...வகை ஒன்றில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த மாவட்டங்களில், தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்பொருள், பல்ப், கேபிள், சுவிட்ச் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படும் வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.வாகன விநியோகஸ்தர், விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையம், உதிரிபாகம் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.கணினி, செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும்.கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.அரசின் அத்தியாவசியத் துறைகளில் 100 சதவிகிதமும், இதர அரசு அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதர தொழிற்சாலைகளில், 33% பணியாளர்களும், தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும்.திறந்த வெளியில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி