தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகளை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 8 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், பொதுக்கூட்டங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிற மாநில போக்குவரத்துக்கான தடையும் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.