தமிழ்நாடு

தேசிய கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லும் எல்.கே.ஜி. மாணவன்

தேசிய கொடிகளை பார்த்து அந்தந்த நாடுகளின் பெயர்களை கட கடவென மூச்சுவிடாமல் கூறி 4 வயது மாணவர் ஒருவர் அசத்துகிறார்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் - சுகன்யா தம்பதியின் 4 வயது மகன் ஹரிசரண். தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் ஹரிசரண் படிப்பில் படுசுட்டி.

படிப்பில் இவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்த பெற்றோர், பள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனர். 2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் பலரும் வியக்கும் வகையில், 196 உலக நாடுகளின் தேசிய கொடிகளை பார்த்து அந்தந்த நாடுகளின் பெயரை சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். அசத்தல் மாணவர் ஹரிசரணை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்