தமிழ்நாடு

வனவிலங்குகளை கட்டுப்படுத்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி..! சோகத்தில் கிராம மக்கள்

தந்தி டிவி

வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவர் நேற்று தான் வளர்த்து வரும் பசு மாட்டுக்கு புல் அறுப்பதற்காக தோட்டத்துக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வரை திரும்பி வராததால் உறவினர்கள் அவரை தோட்டம் முழுவதும் தேடி உள்ளனர். அப்போது, பக்கத்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அவர் பலியாகி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி மின்வேலியில் சிக்கி இறந்த தகவல் கேட்டு அவரது மகள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்