கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணிக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதாக கூறி தனியார் மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த வருவாய்துறை மற்றும் போலீசாரிடம் மணல் குவாரியை மூட வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.