சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்ற அப்பகுதி மீனவர்கள் கடலில் பால் மற்றும் மலர்களை தூவி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் மனித சங்கிலி அமைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் சாகர்மாலா திட்டங்களை கைவிடக் கோரி கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.