கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் பெயர் மாற்றத்தால் விஜயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த பிரச்சினை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்று விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.