தமிழ்நாடு

இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் : வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் அருகே வாகன ஓட்டுநர்களின் முழு ஒத்துழைப்புடன் இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

* தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் தலைகவசம் அணியாமல் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு கிராமத்தில், இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

* கடந்த இரண்டு மாதமாக இயங்கி வரும் இந்த ஹெல்மெட் வாடகை நிலையத்தை 40க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரைக்கும் ஒரு ஹெல்மெட் கூட யாரும் எடுத்துச் செல்லாமல், மீண்டும் அதே இடத்தில் வைத்து செல்வது தான் சிறப்பு.

* எதற்கெடுத்தாலும் பணத்தை எதிர்பார்க்கும் இந்த உலகில், சாலை விபத்தில் உயிர் பறிபோவதை தவிர்க்கும் வகையில், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் வழங்கி வரும் இலவச ஹெல்மெட் சேவை ஓட்டுநர்கள் மத்தியில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி