கொள்ளிட ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் கடலூர் கொள்ளிடம் ஆற்றின் வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாறு, மணிமுக்தாறு, கெடிலம், பரவனாறு உள்ளிட்ட ஆறு ஆறுகள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நீரின் மேலாண்மையில் அரசு தவறிழைப்பதே என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வீணாக கடலில் கலக்கும் நீரை, இந்த ஆறுகளுக்கு திருப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மாவட்ட விவசாயிகள் குரலாகும்.