கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தில் கரும்பு வெட்ட வந்த கூலி தொழிலாளிகளை அரசு அதிகாரி ஒருவர் அவதூறு வார்த்தைகள் கூறி தாக்க முயற்சித்துள்ளார். எம்.ஆர்.கே. கரும்பு ஆலையில் பணியாற்றும் தலைமை அலுவலர் ராஜதுரை என்பவர், கூலி தொழிலாளர்களை தரக்குறைவாக பேசி வருவதாக, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறாக பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.