கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில், உள்ள கருப்பசாமி கோயிலின் பின்புறம், நீர்வழி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை, கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அகற்ற வந்தனர். அப்போது, அந்த கோயிலைச் சேர்ந்த சாமியாரின் ஆதரவாளர்கள், பொக்லைன் எந்திரத்தை வழி மறித்து தீக்குளிக்க முயன்றனர். மேலும், கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் டீசலை சிலர் ஊற்றியுள்ளனர். உடனடியாக அவர் கோயிலை விட்டு வெளியேறினார். இது குறித்து, கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.