தமிழ்நாடு

படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட கடலூர் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதி சோழன், பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் மெல்வின் ராஜா சிங் தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முகமது ஆசிப்பிடம் கொடுத்தனர். இதனை மனுநீதி சோழன் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார் ஆவணங்களை கைப்பற்றினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்