கடலூர் மாவட்டத்தில் முகநூல் மூலம் காதலித்த திருநங்கையை, தனது பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருவந்திபுரத்தை சேர்ந்த திருநங்கை அமிர்தா, படித்து முடித்து விட்டு மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறவே, அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.