Crocodile | Dog | Tirupur | எதிர்பாரா நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த முதலை - பதறவிட்டு விரட்டிய நாய்கள் #crocodile #dog #tirupur #thanthitv உடுமலை அருகே வீட்டுக்குள் புகுந்த முதலையை விரட்டியடித்த நாய்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பாப்பான்குளம் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த முதலை, நாய்கள் விரட்டியதால் அங்கிருந்து நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாப்பான்குளம் பகுதியில் உள்ள நொச்சிப்பள்ளம் ஓடையில் முதலை சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மரகதம் என்பவரது வீட்டிற்குள் முதலை வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த இரண்டு நாய்கள் முதலையை விரட்ட முயன்றன. நாய்களின் தொடர் குரைப்பால் முதலை அங்கிருந்து சென்றுள்ளது.