தமிழ்நாடு

குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக போராட்டம் - போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு

மேலவளவு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு - முள்ளு ஏற்பட்டது.

தந்தி டிவி

1996 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டதால், முருகேசன் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 13 பேர் ஆயுள் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்நிலையில் கடந்த வாரம், 13 பேரையும் தமிழக அரசு பொது மன்னிப்பில் விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை கோரிப்பாளையத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால்,இரு தரப்பிற்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதைக்கண்டித்து, போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக