தமிழ்நாடு

பெத்த தாயை பிணமாக மாற்றிய மகன்.. மாமியார் பாசத்தில் கொடூர உண்மையை வெளிக்கொண்டு வந்த மருமகள்

தந்தி டிவி

ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது தாய் அங்கம்மாள்,மனைவி கீதா மற்றும் இரு மகன்கள் என கூட்டுகுடும்பாக வாழ்ந்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 30ம் தேதி ஆனந்தன் தாய் அங்கம்மாள் தலையில் ரத்த காயத்துடன் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் கிடந்துள்ளார்.இதையடுத்து மருமகள் கீதா உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து மருமகள் கீதா , தனது மாமியார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த நிலையில் மகன் ஆனந்தனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். தாய் அங்கம்மாளிடம் மாத தவணை கட்டுவதற்றாக ஐந்தாயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் ஆனந்தன். தர மறுத்த தாயை, வீட்டின் பூட்டால் அடித்து கொலை செய்துவிட்டு ரத்த கொதிப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆனந்தன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி