தமிழ்நாடு

கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு - பட்டாசு விற்பனையாளர்கள்

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை போன்ற பகுதிகளில் 900 மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும் கவரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட புதுவகையான கம்பி மத்தாப்பு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

* இதே போல் 7 முதல் 75 செ.மீ வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக PINK கம்பி மத்தாப்பு மற்றும் லெமன் மத்தாப்புகள் இந்தாண்டுக்கான புதுவரவாக உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

* புது வரவாக 4 மற்றும் 5 வண்ணங்களை கொண்ட ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிப்பதாக ஊழியர் நந்தினி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்