தமிழ்நாடு

"காற்றுமாசு மோசமான இடங்களில் பட்டாசு வெடிக்க தடை" - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் காற்று மாசு மோசமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காற்று மாசு ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் விளக்கமளித்திருந்த பட்டாசு வியாபாரிகள், பசுமைப்பட்டாசுகள் வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுவதாக நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தீர்ப்பளித்துள்ள பசுமை தீர்ப்பாயம், நாடு முழுவதும் காற்றுமாசு மோசமாக இருக்கும் இடங்களிலும், டெல்லி மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், காற்றுமாசு மிதமாகவும், அதற்கு கீழாகவும் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 2 மணி நேரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை