ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் சாந்தப்புடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு ஒன்று இரண்டு கன்றுகளை ஈன்றது. எப்போதும் போல் இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக காளை, கெடேரி (பெண்) கன்றுகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் கண்டு சென்றனர்