தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதலமைச்சர் இன்று ஆலோசனை - ஊரடங்கு தளர்வு பரிந்துரை, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை ஒரு சில நிறுவனங்களுக்கு தளர்த்துவது குறித்த பரிந்துரையை நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடனும்12.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்