தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது. புதிதாக 4 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1 புள்ளி 38 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. இதே போல புதிதாக 3 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 90 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா

சென்னையில் ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் மொத்த பாதிப்பு 77 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னையில் மட்டும் இதுவரை ஆயிரத்து 253 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா