தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா - 800-ஐ கடந்த உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் ஆயிரத்து 227 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 39 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 833 ஆக உயர்ந்து உள்ளது. 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 1,380 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு - 645

சென்னையில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 205 ஆக உள்ள நிலையில் , சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 889 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 24 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் கொரோனாவால் 645 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே