சென்னையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 929 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 36 ஆயிரம் பேருக்கும் மேல் குணமடைந்துள்ள நிலையில், 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.