தமிழ்நாடு

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் - விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பலமுறை வாய்ப்பளித்தும் அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்