சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை மீட்கக் கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.