தமிழ்நாடு

தமிழகத்தை அதிர வைத்த வழக்கு... "ஏஎஸ்பி உள்பட..." - கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்களும் வருகிற 28ம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் உள்ளிட்டோருக்கு கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நான்காவது முறையாக இந்த வழக்கானது, நெல்லை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வீர் சிங் உட்பட 12 காவல்துறை அலுவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் ஆஜராகவில்லை. விசாரணைக்குப் பிறகு வருகிற 28ம் தேதி வழக்கில் தொடர்புடைய 14 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’