தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தார்.அதில் முந்தைய ஆட்சியில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியநாராயணன், தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததில் முறைகேடு செய்துள்ளதாக கூறி இருந்தார்.இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா, மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிஇருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஜூன் 27ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, லஞ்சஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு