தமிழ்நாடு

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பிரிகேஜி , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 16 ந்தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அறிவுறுத்தி பள்ளி கல்வித்துறை ஏற்கனவே சுற்றிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்புற மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்