தமிழகத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பக் கோரி, சென்னையில் மலேசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனாம்பேட்டையில் உள்ள மலேசிய தூதரகம் முன்பு நடந்த போராட்டத்தில்,300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விமானம் ரத்தால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல், தங்கும் வசதி, மருந்து, உணவின்றி தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.