தமிழ்நாடு

கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களை நடுங்க வைக்கும் ஒரு உண்மை - கிளம்பிய அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

கோவாக்ஸின் போட்டு கொண்ட ஓராண்டுக்கு பிறகு பல உடல்நல பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி இருப்பது பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

18 மாதங்களாக கோவாக்ஸின் எடுத்து கொண்ட 926 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கோவாக்ஸின் போட்டு கொண்ட மூன்றில் ஒரு நபருக்கு சுவாசக் கோளாறு, தோல் சம்பந்தமான நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், தசை சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

அதுவும் குறிப்பாக பெண்கள் மற்றும் ஏற்கனவே அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களில் மாதவிடாய் ஏற்படுவதில் மாற்றம், கண்களில் பாதிப்பு மற்றும் ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்படி காலதாமதமாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து மேலும் புரிந்து கொள்ள நீடிக்கப்பட்ட ஆய்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்