கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள அத்தியாவசிய தேவையான முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்தியாவசிய பொருட்களான முக கவசம், சேனிடைசர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது சம்பந்தமாக தமிழக அரசு மார்ச் 20க்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.