கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால், ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, ஈஷா மையத்தின் தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஷா தன்னார்வலர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் செய்ய வலியுறுத்தியுள்ளார்.