சென்னையை அடுத்த ஆலந்தூரில், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, கொரோனாவிற்கு பயந்து போராட்டங்களை விட மாட்டோம் என்றும் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.