கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில சுகாதார துறை மூலம் மாவட்ட, கிராமப்புறங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.