தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தந்தி டிவி

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, மருத்துவமனை சூழல், ஆம்புலன்ஸ் பயன்பாடு, சிகிச்சை குறிப்புகள், போக்குவரத்து அறிவுறுத்தல் குறித்து செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக கருதப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பல்நோக்கு உயர்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

* இந்த வார்டுகளுக்கு செல்லும் நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட சுத்தப்படுத்தும் திரவங்கள் உதவியுடன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

* மாவட்ட அளவில் மத்திய, மாநில அரசு துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

* கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பேணவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

* கைகளை சுத்தப்படும் திரவங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

* கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அதற்கான விழிப்புணர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் தலைமை செயலாளர் சண்முகம் கேட்டுக்கோண்டுள்ளார்

* இந்த பணிகளை தினம்தோறும் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி