தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 10 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 253 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 33 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 251 பேரும், சேலத்தில் 205 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்