தனியார் அமைப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக் கழக விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.