தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை - "மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை" - தமிழக அரசு

பிரிகேஜ் , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது

தந்தி டிவி

பிரிகேஜ் , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிகேஜி , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்