கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள புரதச்சத்து அடங்கிய உணவு வகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.