கொரோனா தொற்றால் கடந்த 174 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2000 பேருந்துகளில் முதற்கட்டமாக 500 பேருந்துகள் நாளை இயக்கப்படுகிறது. வழக்கமான பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் கொரோனா காரணமாக ஜன்னல் திரை இருக்கை துணி அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் மட்டுமே நாளை முதல் இயக்கப்படும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.