திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் மத பிரச்சாரத்திற்கு வந்த வங்க தேசத்தை சேர்ந்த 11 பேரின், விசா காலம் முடிந்ததால் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 11 பேருக்கும் ஏற்கனவே எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரி வந்தது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையில் அவர்களில் 2 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 69 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மேலும் 5 பேருக்கு புதிதாக நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.