தமிழ்நாடு

கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி, பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நிவாரண நிதியாக 5000 ஆயிரம் ரூபாயை வழங்க கோரியும்,

100 நாள் வேலையை 200 நாள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அலங்காநல்லூர்

இதேபோல், மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கொரோனா நிவாரண நிதி வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஒசூர்

ஒசூர் அருகேயுள்ள நாட்ராம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு, கொரோனா நிவாரண நிதி, 100 நாள் வேலை திட்டத்தின் நாட்களை அதிகரித்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி