தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 418 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 188 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 32 ஆயிரத்து 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்து தஞ்சாவூரில் 210 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சேலத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.