சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு காரணமாக, இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், நாமக்கலில் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னைக்கு செல்லவேண்டிய சுமார் ஒன்றரை கோடி கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை, சந்திர கிரகணம் உள்ளிட்ட காரணங்களாலும் இறைச்சி, முட்டை விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனையான கறிக்கோழி, தற்போது கிலோ 100 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 55 ரூபாயாகவும் , முட்டை கொள்முதல் விலை 3 ரூபாய் 50 காசுகளாகவும் சரிந்துள்ளதால் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.